வவுனியாவில் கூடியது இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்தியகுழு
இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்தியகுழு கூட்டம் எதிர்க்கட்சி தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் தலைமையில் இடம்பெற்று வருகின்றது.
இந்த கூட்டம் இன்று காலை வவுனியா இரண்டாம் குறுக்குத்தெருவில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியொன்றில் நடைபெற்று வருகிறது.
இதில் தமிழரசுக்கட்சியின் மத்தியகுழுவில் அங்கம் வகிக்கும் நாடhளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் உள்ளட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர்.
இதன்போது புதிய அரசியல் அமைப்பு விடயம், கட்சியின் வளர்ச்சி தொடர்பாக கலந்துரையாடப்படும் என எதிர்பாபாக்கப்படுகின்றது.