கிளிநொச்சியில் ஆளுநர் தலைமையில் காணிப் பிணக்குகள்; கலந்துரையாடல்
கிளிநொச்சி மாவட்டத்தில் காணப்படும் காணிப்பிணக்குகளிற்கு தீர்வு காணப்படும் நோக்கில் வடக்கு மாகாண ஆளுனரின் தலைமையில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறுகின்றது.
கிளிநொச்சி மாவட்டத்தின் நான்கு பிரதேச செயலகத்தில் காணப்படும் காணிப்பிணக்குகளை தீர்ப்பது தொடர்பில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்று வருகின்றது.
இந்த கலந்துரையாடலில் வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம், வடமாகாண காணி ஆணையாளர், கமநலசேவை திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.