கிழக்கு பல்கலையில் சிங்கள மாணவர்களால் பதற்றம்
கிழக்கு பல்கலைக்கழகத்தின் சிங்கள மாணவர்கள் ஒன்றிணைந்து இன்று (வியாழக்கிழமை) காலை முதல் முன்னெடுத்துவரும் சத்தியாக்கிரக போராட்டம் காரணமாக அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
பல்வேறு காரணங்களுக்காக கடந்த சில நாட்களில் பல்கலையில் சில சிங்கள மாணவர்கள் இடைநிறுத்தப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
உபவேந்தரின் கட்டிட தொகுதிக்குள் பிரவேசித்துள்ள குறித்த மாணவர்கள், ஒலிவாங்கிகள் மூலம் ஒலியெழுப்பிக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் தற்போது மாணவர்களுடன் பல்கலைக்கழக நிர்வாகத்தினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.