காணாமல் போனோர் சட்டமூலத்துக்கு திருத்தம் கொண்டுவரப்படும் – பிரதமர்
காணாமல் போனோர் தொடர்பான காரியாலயம் அமைக்கும் சட்டமூலத்துக்கு திருத்தம் முன்வைப்பதற்கு அரசாங்கம் தயாராக உள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
மக்கள் விடுதலை முன்னணி முன்வைத்த மூன்று திருத்தங்களில் ஒன்று நிறைவேற்றப்பட்ட சட்டமூலத்தில் இல்லை என ம.வி.மு. தலைவர் அனுராகுமார திசாநாயக்க சுட்டிக்காட்டியள்ளார்.
இதனை அடுத்து மேற்படி சட்டமூலத்துக்கு திருத்தம் கொண்டுவரப்படவுள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.