நேர்மையாக மஹிந்தவை கைது செய்தால், நாம் எதுவும் பேச மாட்டோம் - THAMILKINGDOM நேர்மையாக மஹிந்தவை கைது செய்தால், நாம் எதுவும் பேச மாட்டோம் - THAMILKINGDOM
 • Latest News

  நேர்மையாக மஹிந்தவை கைது செய்தால், நாம் எதுவும் பேச மாட்டோம்  மஹிந்த ராஜபக்ஷ தவறு செய்திருப்பதாக உரிய சாட்சி ஆதாரங்களுடன் நீதிமன்றத்தில் சமர்ப்பித்து, பின்னர் அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு கைது செய்யப்பட்டால், அதற்கு எதிராக நாம் ஒரு வார்த்தை கூட பேச மாட்டோம் என கூட்டு எதிர்க் கட்சியின் முக்கிய பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மம்பில தெரிவித்தார்.

  நேற்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.

  சீன உதவியுடன் மஹிந்த ராஜபக்ஷ ஆரம்பித்த அபிவிருத்தித் திட்டம் தொடர்பாக, புதிய வரைபடங்களுடன் சீனா சென்று, சீனாவினால் அமைக்கப்பட்ட அபிவிருத்தித் திட்டத்தை மீண்டும் சீனாவுக்கே எடுத்துக் காட்டி உதவி செய்யுமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

  நாட்டில் இன்று ஏற்பட்டுள்ள அரசியல் நிலைமை விசித்திரமானது. எந்தவொரு தவறு செய்தவரும் ஜனாதிபதியுடன் சேர்ந்தால் அவர் தூய்மைப்படுத்தப்படுகின்றார். இது சரியாக ஒரு துணி சலவை செய்யும் நிறுவனம் போன்றது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: நேர்மையாக மஹிந்தவை கைது செய்தால், நாம் எதுவும் பேச மாட்டோம் Rating: 5 Reviewed By: Tamilkingdom
  Scroll to Top