கனடிய அரசின் அதியுயர் விருதைப் பெறும் தமிழ்ப் பொலிசார் தமிழ் விழாவில் பங்கேற்பு - THAMILKINGDOM கனடிய அரசின் அதியுயர் விருதைப் பெறும் தமிழ்ப் பொலிசார் தமிழ் விழாவில் பங்கேற்பு - THAMILKINGDOM
 • Latest News

  கனடிய அரசின் அதியுயர் விருதைப் பெறும் தமிழ்ப் பொலிசார் தமிழ் விழாவில் பங்கேற்பு


  கனடியத் தமிழ் பாதுகாப்பு வலையமைப்பு
  என்ற அமைப்பை அண்மையில் உருவாக்கக் காரணமாக இருந்தவரும், ஹால்ரன் பிராந்தியப் துணைப் பொலிஸ்மா அதிபருமான நிசாந் துரையப்பா அவர்கள் கனடாவின் அதியுயர் விருதினைப் பெறுகின்றார்.

  Order of Merit Canada எனப்படும் இந்தத் தகுதிக்கு பரிந்துரைக்கப்பட்ட முதல் தென்னாசியர் என்ற பெருமையை இவர் பெறுவதோடு தமிழர்களின் வளர்ச்சிப் படியில் கனடாவின் வரலாற்றில் ஒரு தமிழ்ப் பெயரைப் பதித்த பெருமைக்குரியவராகவும் மாறியுள்ளார்.

  துணைப் பொலிஸ்மா அதிபர் நிசாந் உள்ளிட்ட ரொறன்ரோப் பொலிஸ் பிரிவைச் சேர்ந்த சுரேன் சிவதாசன், கஜன் கதிரவேலு, நிரான் ஜெயநேசன், ஜொனி பொப்லி உள்ளிட்ட பல துடிப்புள்ள பாதுகாப்பு துறையில் அங்கம் வகிங்கும் இளம் பொலிசார் மற்றும் துணைப்படையை சேர்ந்த பலரும் இதில் கலந்து கொண்டிருந்தனர்.

  இவர்களிற்கு மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பு இருந்ததோடு அவர்களோடு முண்டியடித்துப் புகைப்படமெடுத்ததையும், இந்தப் பொலிஸ் அதிகாரிகளை ஆச்சரியத்துடன் பார்த்தையும் நிகழ்வின் முழுப் பொழுதிலும் காண முடிந்தது.

  கனடியத் தமிழ்க் காங்கிரஸின் தலைவரான ராஜ் தவரட்ணசிங்கத்தின் ஆதரவுடன் இவர்களது பங்குபற்றுதல் இடம்பெற்றிருந்ததும், திரு. ராஜ் தவரட்ணசிங்கம் இந்தப் பொலிசாருக்கு விழாவில் வைத்து நன்றியுரை தெரிவித்ததும் இந் நிகழ்வின் உச்சப்புள்ளியாக இருந்தது.

  கனடியத் தமிழர் பாதுகாப்பு வலையமைப்பு என்ற அமைப்பை 80க்கு மேற்பட்ட பாதுகாப்புத்துறை சார் தமிழ் அதிகாரிகளின் இணைவுடன் உருவாக்கி, அதன் மூலம் தமிழ்ச் சமுதாயத்திற்கான கற்பித்தல் மற்றும் கடப்பாடுகளை போதித்தல் என்பவற்றில் ஈடுபட்டிருக்கும் இந்த அமைப்பினர்,

  தமது செயற்பாடுகளின் கன்னிமுயற்சியாக இந்த வருடத்தைய தமிழர் தெருவிழாவையே உபயோகித்தனர் என்பதும், இதனைத் தொடர்ந்து எதிர்வரும் காலத்தில் பல நிகழ்வுகளிலும் தங்களது செயற்பாட்டைத் தொடரவுள்ளனர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: கனடிய அரசின் அதியுயர் விருதைப் பெறும் தமிழ்ப் பொலிசார் தமிழ் விழாவில் பங்கேற்பு Rating: 5 Reviewed By: Tamilkingdom
  Scroll to Top