Breaking News

புத்தர் சிலை விவகாரம் : மாபெரும் போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானம்



வடக்கில் திட்டமிட்ட வகையில் புத்தர் சிலைகளை அமைக்கும் செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தீர்மானமொன்று நிறைவேற்ற ப்பட்டதோடு, மாபெரும் போராட்டம் மற்றும் கண்டன பேரணி ஆகியவற்றை முன்னெடுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நேற்று (சனிக்கிழமை) மாலை நடைபெற்ற விசேட கலந்துரையாடலிலேயே இத்தீர்மானம் எடுக்கப்பட்டதாக, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

கிளிநொச்சி மாவட்டம் தழுவிய ரீதியில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 7ஆம் திகதி குறித்த போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இக் கலந்துரையாடலில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ் பிரேமச்சந்திரன், செ.கஜேந்திரன், மு.சந்திரகுமார் மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகளும் கலந்துகொண்டிருந்தனர்.

இதேவேளை, வடக்கின் புத்தர் சிலைகளை நிறுவும் செயற்பாடு குறித்து இன்றைய தினம் தமிழ் மக்கள் பேரவையால் முக்கிய கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.