Breaking News

வாக்களிக்கும் உரிமை தொடர்பில் சட்டம் தேவை : மஹிந்த



தேர்தல்களில் 18 வயது நிரம்பியவர்களுக்கு வாக்களிக்கும் உரிமையை பெற்றுக்கொள்ளும் வகையில் சட்டங்களில் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டுமென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

வாக்காளர் பட்டியல் புதுப்பிக்கப்படும் போது, 19 வயதிற்கு பின்னரே பலர் வாக்களிக்கும் வாய்ப்பை பெறுவதாக குறிப்பிட்டுள்ள அவர், இனிவரும் காலத்தில் 18 வயதிலேயே வாக்களிக்கும் வகையில் சட்டத்திருத்தத்தை மேற்கொள்ள வேண்டுமென மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இவ்வருடத்திற்கான வாக்காளர் இடாப்பில் பெயர்களை சேர்த்துக்கொள்ளாதவர்களுக்கு மற்றுமொரு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாகவும் எதிர்வரும் 26ஆம் திகதிவரை இச் செயற்பாட்டை மேற்கொள்ளலாம் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.