மாவீரர் தினம் கொண்டாட வேண்டாம் - மாவை கட்டளை
மாவீரர் நாள் கார்த்திகை மாதம் 27ஆம் திகதி கொண்டாடாது வேறொரு தினத்தில் கொண்டாடப்ப டவேண்டுமென தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.
ரெலோ கட்சியின் 33ஆவது அஞ்சலிக்கூட்டம், ரெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் வவுனியா நகரசபை மண்டபத்தில் கடந்த மாதம் 27ஆம் திகதி நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மாவை சேனாதிராசா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில், தமிழீழ மாவீரர் நாள் – கார்த்திகை 27இனை இல்லாமல் செய்து அதற்குப் பதிலாக, பிறிதொரு நாளைத் தேர்ந்தெடுத்து அன்றைய நாள் ரெலோ, ஈபிஆர்எல்எவ், ஈபிடிபி போன்ற அமைப்புக்களில் மரணித்த உறுப்பினர்களையும் நினைவுகூரவேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.
மாவை சேனாதிராசாவின் இச்செயலுக்கு தமிழ் மக்கள் தமது கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர்.








