Breaking News

நாம் மக்களிடம் மன்னிப்புக் கோருகின்றோம்- மஹிந்த



ஐக்கிய தேசியக் கட்சிக்கும், அரசாங்கத்துக்கும் எதிராக நடைபவனி நடாத்துவதாக கூறிய ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் சிரிக்கொத்தவின் முன்னால் பஸ்களை நிறுத்திவிட்டு வந்து, எமது கட்சித் தலைமையத்தின் முன்னால் வந்து கூச்சலிட்டதை அவதானிக்க முடிந்ததாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளரும் அமைச்சருமாகிய மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

நடைபவனி எனக் கூறிக் கொண்டு வந்தவர்களில் ஒரு தொகுதியினர் மதுபான சாலைகளில் வரிசையாக நின்றிருந்ததை மக்கள் ஊடகங்களில் பார்த்தனர். இப்படியான செயற்பாடுகளை மேற்கொள்பவர்களுக்கு வேட்பாளர் சீட்டை வழங்கியமைக்காக நாம் மக்களிடம் மன்னிப்புக் கோருகின்றோம் எனவும் இன்று சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அமைச்சர் குறிப்பிட்டார்.