அரசாங்கம் அதிகம் கூத்தாடினால் கொழும்பை முற்றுகையிடுவோம்- விமல்
அதிகம் கூத்தடிக்க வேண்டாம். அப்படிச் செய்வீர்களாயின் சனக் கூட்டத்தைக் கூட்டி வந்து, கொழும்பை முற்றுகையிடுவோம் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் கூட்டு எதிர்க் கட்சியின் உறுப்பினருமான விமல் வீரவங்ச அரசாங்கத்துக்கு எச்சரிக்கை விடுத்தார்.
இந்த நடைபவனியினால் பொலிஸாரின் பச்சை உள்ளாடையை மக்களின் வெளிச்சத்துக்கு கொண்டு வர முடியுமாகியது. சிவப்பு யானைக் குட்டியின் பச்சை உள்ளாடையையும் வெளிச்சத்துக்கு கொண்டுவர முடியுமாக இருந்தது. இந்த நடைபவனியினால், அரசாங்கத்தை கவிழ்க்க முடியாமல் போனது. கோரிக்கைகளை வென்றெடுக்க முடியாமல் போனது என சிவப்பு யானைக் குட்டிகள் நடைபவனியைப் பற்றி விளக்கம் கூறினர்.
முடியுமானால் உத்தியோகபுர்வ எதிர்க் கட்சி எனக் கூறிக் கொள்பவர்கள், இதுபோன்ற ஒரு நடைபவனியை ஏற்பாடு செய்து காட்டட்டும் என நாம் சவால் விடுக்கின்றோம் எனவும் விமல் வீரவங்க மேலும் குறிப்பிட்டார்.








