Breaking News

யாழ். பல்கலை செல்ல மறுக்கும் மாணவர்களின் பெற்றோர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு



யாழ். பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்துக்கு செல்ல முடியாதுள்ள சிங்கள மாணவர்களின் பெற்றோர்களுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துரையாடலொன்றை மேற்கொள்ள வுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதற்கான அழைப்பை விடுத்துள்ளார்.

இந்த கலந்துரையாடலுக்கு அப்பல்கலையின் உபவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரத்னம் உட்பட பேராசிரியர்களும் அழைக்கப்பட்டுள்ளனர். பொலிஸ் மா அதிபர் மற்றும் பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்துகெள்ளவுள்ளனர்.

கடந்த மாதம் 16 ஆம் திகதி யாழ். பல்கலையின் விஞ்ஞான பீட மாணவர்களிடையே ஏற்பட்ட மோதல் சம்பவத்தையடுத்து தமது பிள்ளைகளை அப்பல்கலைக்கழகத்துக்கு அனுப்புவதற்கு பெற்றோர்கள் மறுப்புத் தெரிவித்திருந்தனர். இது குறித்து பேசுவதற்கே இன்று அவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.