Breaking News

பல்கலை ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு தொடரும்!



பல்கலைக்கழக கல்விசார ஊழியர்களின் கோரிக்கைகளுக்கு சாதகமான பதிலை எழுத்து மூலம் வழங்காத காரணத்தால் தொடர்சியான பணிப்புறக்கணிப்பை மேற்கொள்ளவுள்ளதாக தொழில் சங்கங்கள் அறிவித்து ள்ளன.

பல்கலைக்கழகங்களின் தொழிற்சங்கங்களின் தொழிற்சங்கக் கூட்டுக்குழு சில கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழு தலைவருக்கு கடந்த ஜனவரி மாதம் 25 ஆம் திகதி கடிதம் ஒன்றை வழங்கியிருந்தனர்.

அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாததன் காரணமாக நாடு முழுவதிலும் உள்ள பல்கலைக்கழக மாணிய ஆணைக்குழு, பல்கலைகழகங்கள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்களில் உள்ள கல்விசாரா ஊழியர்கள் தொடர்சியான கவனயீர்ப்பு போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர். அதனடிப்படையில் தற்போது நாடுமுழுவதிலும் உள்ள பல்கலைக்கழக ஊழியர்கள் தொடர்சியான வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் ஜனாதிபதியுடனும் ஆணைக்குழுவின் தலைவருடனும் மேற்கொண்ட கலந்துரையாடலின் பின்னரும் அவர்கள் ஏற்றுக்கொண்ட கோரிக்கைகளை எழுத்துமூலம் வழங்காத காரணத்தால் கலந்துரையாடல் சாதகமானதாக அமையவில்லை.

தமது கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டு எழுத்துமூல உடன்பாட்டுக்கு வரும்வரை தமது போராட்டம் தொடர்சியாக முன்னெடுக்கப்படவுள்ளது என தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.