Breaking News

இந்தியா – இலங்கைக்கு இடையில் பாலம் - குண்டுவைக்க தயாராகும் கம்மன்பில



இந்தியா மற்றும் இலங்கையை இணைக்கும் பாலம் நிர்மாணிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டால் தேசிய பாதுகாப்பு கருதி அதனை உடைக்க நேரிடும் என பாரளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையில் பாலம் அமைப்பதாக அமைச்சர் கபீர் ஹாஷீம் இந்தோனேசிய, ஜகார்தா நகரில் தெரிவித்ததாக நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து தெரிவிக்கும் போது பாரளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

இந்த பாலம் இந்தியா மற்றும் இலங்கை இணைவதாக தெரிவிக்கப்பட்டாலும், இலங்கையின் வட பகுதியும் இந்தியாவின் தமிழ் நாடுமே இணைவதாக அவர் தெரிவித்துள்ளார்.