Breaking News

மஹிந்தவின் பாணியை பின்பற்றுகின்றதா அரசாங்கம்?

சர்வதேச அரங்கில் இலங்கை தொடர்பில் நன்மதிப்பை ஏற்படுத்திக் கொள்ளும் நோக்கில் அரசாங்கம்  பொதுசன உறவு  நிறுவனங்களின் உதவிகளை நாடியுள்ளதாக    தெரிவிக்கப்பட்டுள்ளது. 


முக்கிய அமைச்சர் ஒருவர் விடயத்தில் கடந்த மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் பாணியை பின்பற்றி வருவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் பிரச்சார நிறுவனமொன்றின் ஊடாக இலங்கையின் நன்மதிப்பை மேம்படுத்தி பிரச்சாரம் செய்ய குறித்த அமைச்சர் முயற்சிப்பதாக ஆங்கில ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.

இவ்வாறு  உதவி பெறப்பட்டுள்ள அமெரிக்க நிறுவனத்தின் இணைய தளத்தில் இந்த விடயங்கள் பற்றிய விரபங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த பிரச்சாரப் பணிகளுக்கான செலவுகள்  செலுத்தப்பட்டுள்ளதாகவும் இதற்காக அமைச்சரவையின் அங்கீகாரம் பெற்றுக் கொள்ளப்படவில்லை எனவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

நாட்டின் நன்மதிப்பினை மேம்படுத்த வெளிநாட்டு பிரச்சார நிறுவனங்களுக்கு பாரியளவில் பணம் வழங்கியதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவிற்கு எதிராக குற்றம்  சுமத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.