திருமலை மர்ம கிணறு விவகாரம் : அகழ்ந்தெடுக்கப்பட்ட மண் இன்று சோதனை
மன்னார் மாவட்டத்தின் மாந்தை திருக்கேதீஸ்வரம் பகுதியில் காணப்படும் மர்மக் கிணற்றின் மண், இன்று (வியாழக்கிழமை) சோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளது. அத்தோடு, தடயப்பொ ருட்களும் பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்படவுள்ளன.
மனித எச்சங்கள் காணப்படலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், காணாமல் போனோரின் பெற்றோர் தரப்பு சட்டத்தரணிகளால் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் பிரகாரம், கடந்த மூன்று நாட்களாக குறித்த மர்மக் கிணறு அகழப்பட்டது.
இதன்போது, மனிதப் பல், எலும்புத் துண்டுகள், முட்கம்பி மற்றும் உபயோகிக்கப்படாத துப்பாக்கி ரவைகள் என்பன மீட்கப்பட்டன. இதனையடுத்து, குறித்த தடயப்பொருட்களை பகுப்பாய்வுக்கு உட்படுத்தி நாளைய தினம் நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு மன்னார் நீதவான் ஏ.ஜி.அலெக்ஸ்ராஜா நேற்று உத்தரவிட்டார்.
கண்டெடுக்கப்பட்ட தடயப்பொருட்கள், யுத்தத்தின் போது காணாமல் போனவர்களின் எச்சங்களாக இருக்கலாமென சந்தேகிக்கப்படும் நிலையிலேயே இன்றைய தினம் பகுப்பாய்வு இடம்பெறவுள்ளது.








