Breaking News

படுகொலைக்கு நியாயம் வழங்கப்படவில்லை!

மூதூரில் இடம்பெற்ற கூட்டுப் படுகொலைச் சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தி நீதி வழங்கப்பட வேண்டுமென மனித உரிமைகள் கண்காணிப்பகம், மீண்டும் வலியுறுத்தியுள்ளது.


அதன் சட்ட மற்றும் கொள்கைப்பணிப்பாளர் ஜேம்ஸ் ரோஸ் அறிக்கை ஒன்றின் ஊடாக இதனைத் தெரிவித்துள்ளார். பிரான்ஸை மையமாகக்கொண்டு இயங்கிய ஏ.சீ.எப் என்ற அரச சார்பற்ற நிறுவனத்தின் 17 பணியாளர்கள், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் படுகொலை செய்யப்பட்டனர்.

இது தொடர்பில் விசாரணை நடத்துவதாக தற்போதைய அரசாங்கமும், கடந்த அரசாங்கமும் உறுதி அளித்திருந்த போதிலும், விசாரணைகளில் முன்னேற்றங்கள் இல்லை. இந்த விடயமானது, உள்நாட்டு விசாரணைகளில் சர்வதேசத்தின் பங்களிப்பு இருக்க வேண்டும் என்பதையே எடுத்துரைக்கின்றன.

இந்த நிலையில், மூதூர் படுகொலை உள்ளிட்ட பல்வேறு யுத்தகால சம்பவங்கள் தொடர்பிலும் வெளிநாட்டு பங்களிப்புடன் விசாரணை நடத்தி நீதி வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் தமது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.