அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய
நிறைவேற்று ஜனாதிபதி முறை ஒழிக்கப்படாமல் இருந்தால், அடுத்த ஜனாதிபதி தேர்தலி ல்கோத்தபாய ராஜபக்சவே, கூட்டு எதிர்க்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராகபோட்டியிடுவார் என்று கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர்தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே இந்த தகவலை வெளியிட்டுள்ளார்அ ரசாங்கம், கடந்த ஒருவருடத்துக்குள் நாட்டில் பாரிய பிரச்சினைகளை தோற்றுவித்துள்ளது.
இதன் காரணமாக நாட்டுக்கு பாரிய பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன.
இந்தநிலையில் கூட்டு எதிர்க்கட்சி, அரசாங்கத்தின் ஊழல் நடவடிக்கைகளுக்கு எதிராகபோராடும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டுள்ளார். ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே இந்தக் கருத்துக்களை அவர் வெளியிட்டுள்ளார்.