Breaking News

இன்று முதல் புதிய பஸ் கட்டணம்



பஸ் கட்டண அதிகரிப்பு இன்று முதல் அமுல்படுத்தப்படும் என தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்க தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

நூற்றுக்கு 6 வீத அதிகரிப்பு இன்று முதல் பஸ் கட்டணத்துடன் சேரவுள்ளது. இதன்படி, குறைந்த பட்ச பஸ் கட்டணத்தின் பெறுமதி 9 ரூபாவாக அதிகரிக்கின்றது.

இந்த பஸ் கட்டண அதிகரிப்பு தொடர்பான அட்டவணையை சகல பஸ்களிலும் காட்சிப்படுத்துமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.