லிப்டன் சுற்றுவட்டத்தில் ஏன் இறுதிக் கூட்டத்தை நடாத்தினோம்-மஹிந்தானந்த விளக்கம்
கெம்பல்பிட்டி மைதானத்துக்கு செல்வதற்கு அனுமதி கிடைத்தும் ஏன்? லிப்டன் சுற்றுவட்டத்தில் கூட்டு எதிர்க் கட்சியின் நடைபவனி இறுதிக் கூட்டத்தை நடாத்தினார்கள் என கூட்டு எதிர்க் கட்சியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அலுத்கமகே நேற்று தெளிவுபடுத்தினார்.
கெம்பல்பிட்டி மைதானத்தில் கூட்டத்தை நடாத்த அனுமதி கிடைத்த பின்னரும் ஏன்? லிப்டன் சுற்றுவட்டத்தைத் தெரிவு செய்தீர்கள் என இன்று நடைபெற்ற கூட்டு எதிர்க் கட்சியின் ஊடகவியலாளர் சந்திப்பில் வினா எழுப்பப்பட்டது.
இதற்குப் பதிலளித்த முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே,
அரசாங்கம் கூறும் இடத்தில் நாம் கூட்டம் கூட்ட தயாரில்லை. எமக்கு வேண்டிய இடத்திலேயே நாம் கூட்டம் கூடுவதற்கான தீர்மானத்தை எடுப்போம் எனக் குறிப்பிட்டார்.
இதேவேளை, கெம்பல்பிட்டிய மைதானத்தை நிரப்புவதற்கு சனம் போதாமையினாலேயே சில ஆயிரம் பேரைக் கொண்டு லிப்டன் சுற்றுவட்டத்தை நிரப்பிக் காட்டியதாக இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போது அமைச்சர் கயந்த கருணாதிலக்க குறிப்பிட்டிருந்தார்.








