Breaking News

வடக்கில் இரு பொருளாதார மத்திய நிலையங்களை அமைக்க அமைச்சரவை அங்கீகாரம்



வடக்கிற்கான விசேட பொருளாதார மத்திய நிலையங்கள் இரண்டை நிர்மாணிப்பதற்கும் அதற்கான ஆலோசனை சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

பொருளாதார முகாமைத்துவம் தொடர்பான அமைச்சரவைக் குழுவின் பிரேரணைக்கு அமைவாக, விசேட பொருளாதார நிலையமொன்றை அமைப்பதற்குப் பதிலாக இரண்டு விசேட பொருளாதார நிலையங்களை முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பகுதியிலும் வவுனியா மாவட்டத்தின் மதகு வைத்த குளம் பகுதியிலும் நிர்மாணிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இதன் கீழ், விசேட பொருளாதார நிலைய நிர்மாணத்திற்குப் பொருத்தமான இடத்தைத் தெரிவு செய்யும் பொறுப்பு, வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.