Breaking News

தமிழர் காணியில் எதற்காக விஹாரை? : பதில் வழங்க அவகாசம் கோரியுள்ள அரசாங்கம்!



தமிழர் காணிகளில் புத்தர் சிலைகளையும் பௌத்த விஹாரைகளையும் நிறுவி வருகின்றமை பல சர்ச்சைகளை தோற்றுவித்துள்ள நிலையில் இதற்கு பதில் வழங்க அரசாங்கம் கால அவகாசம் கோரியுள்ளது.

குறிப்பாக மன்னார் திருக்கேதீஸ்வரம் ஆலயத்திற்கு அருகாமையில் தனி நபருக்குச் சொந்தமான காணியொன்றில் பௌத்த விஹாரை அமைக்கப்பட்டு வருவது பற்றி, வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் நேற்று (புதன்கிழமை) நாடாளுமன்றில் கேள்வியெழுப்பினார்.

இதற்கு பதிலளிப்பதற்கு இரண்டுவார கால அவகாசம் தேவையென நீதி மற்றும் பௌத்த சாசன அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்