யாழ்.பல்கலைக்கழக மோதல்! - பின்னிணியில் வடக்கு ஆளுநரா?? - அம்பலமாகும் தகவல்
அண்மையில் யாழ்.பல்கலைக்கழக சிங்கள
மாணவர்களுக்கும் தமிழ் மாணவர்களுக்கும் இடையில் இடம்பெற்ற மோதலின் பின்னணியில் வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே அவர்கள் இருப்பதாக தமிழ்கிங்டொம் இணையத்திற்கு யாழ்.பல்கலைக்கழக மாணவர் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
மாணவர்களுக்கும் தமிழ் மாணவர்களுக்கும் இடையில் இடம்பெற்ற மோதலின் பின்னணியில் வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே அவர்கள் இருப்பதாக தமிழ்கிங்டொம் இணையத்திற்கு யாழ்.பல்கலைக்கழக மாணவர் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
அண்மையில் இடம்பெற்ற மோதலின் பின்னர் யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்லைவர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட பின்னர் சம்பவத்துடன் தொடர்புடைய அனைத்து தரப்பினரையும் ஜனாதிபதி அவர்கள் சந்தித்து பிரச்சினையை சுமுகமான முறையில் தீர்த்து வைக்குமாறு பணித்திருந்தார்
இதன் பின்னர் நேற்று முன்தினம் கல்வி அமைச்சின் மூலம் யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தருக்கு அனுப்பி வைத்த கடிதத்தில் தமிழ் ,சிங்கள மாணவர்களை அழைத்து பிரச்சினையை பெரிது படுத்தாமல் தீர்த்து வைக்குமாறும் குறிப்பிடப்பட்டிருந்தது
அதன் பின்னர் நேற்று முன்தினம் சம்பவத்தோடு தொர்புடைய இரு மாணவர் தரப்பையும் சந்தித்த துணைவேந்தர் அவர்கள் இந்த பிரச்சினையை உடன் கைவிட வேண்டும் எனவும் அதற்கு சான்றாக சம்பவத்தோடு தொடர்புடைய இரு தரப்பினரும் கடிதத்தில் ஒப்பம் இட்டு தருமாறு கேட்டுள்ளார்.
அந்த சந்தர்ப்பத்தில் சிங்கள மாணவர்கள் இந்த முடிவிற்கு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் தாம் இந்த பிரச்சினையை கைவிடுவதாகவும் தெரிவித்து சென்றுள்ளர்.
நேற்று காலை துணைவேந்தர் அவர்கள் அனுப்பி வைத்த கடித்தில் தமிழ் மாணவர்களின் தரப்பினர் ஒப்பம் இட்டனர் ஆனால் சிங்கள மாணவர்கள் எவரும் ஒப்பமிடவில்லை. இதற்கு காரணத்தை கேட்டரிந்த தமிழ் மாணவர் தலைவர்களுக்கும் விரிவுரையாளர்களுக்கும் அதற்கான பதில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
குறித்த மோதலின் போது வடக்கு மாகாண ஆளுநர் தமக்கு ஆதரவு வழங்கி பல்வேறு உதவிகள் செய்ததாகவும் அதனால் அவர் இந்த கடிதத்தில் ஒப்பிமிட சொன்னால் மாத்திரமே தாம் ஒப்பமிடுவதாக கூறி சென்றுள்ளர். இதனால் இந்த பிரச்சினை இதனோடு முடிந்து விடாது என்றும் தொடர்ந்து இவ்வாறு மாணவர் குழுக்களுக்கிடையில் மோதல் சம்பவங்கள் இடம்பெற தென்னிலங்கை அரசியல் சக்திகளும் வடக்கு ஆளுநரும் செயற்படுவதாக தமிழ் மாணவர் தலைவர்கள் தெரிவித்துள்ளர் .
இதே வேலை இன்று காலை 9.00 மணிக்கு மோதலில் தொடர்புடைய மூன்று தமிழ் மாணவர்களை யாழ்.மேல்நீதிமன்றத்தில் ஆஜராகின்றமை குறிப்படத்தக்கது.