பஷில் ராஜபக்ஷவுக்கு மீண்டும் விளக்கமறியல்
முன்னாள் பொருளாதார அமைச்சர் பஷில் ராஜபக்ஷவை எதிர்வரும் 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கடுவெல நீதவான் நீதிமன்ற நீதவான் தம்மிக்க ஹேமபால, இன்று உத்தரவிட்டுள்ளார்.
அண்மையில் திவி நெகுமவில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பில் கைதுசெய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டஅவரை சுகயீனம் காரணமாக, சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. எனினும் பின்னர் அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
இந்த நிலையில் இன்று மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பஷிலை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.








