மஹிந்த ரணிலுக்கு அவசர தொலைபேசி அழைப்பு
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு அவசர தொலைபேசி அழைப்பொன்றை மேற்கொண்டுள்ளதாக நம்பக ரமான வட்டாரங்களிலிந்து தகவல்கள் கிடைத்துள்ளன.
கூட்டு எதிர்க்கட்சி முன்னெடுக்கும் பாதயாத்திரையின் இறுதி கூட்டத்தை நடத்துவதற்காக இதுவரை மைதானம் ஒன்று அவர்களுக்கு கிடைக்கப்பெறவில்லை.
இது தொடர்பில் அரசாங்கத்தின் பிரபல அமைச்சர்கள் ஊடாக ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டபோதும், ஜனாதிபதி அதற்கு எந்தவிதமான பதில்களையும் வழங்கவில்லை எனவும் தெரியவருகிறது.
இதன் காரணமாகவே, மைதான அனுமதியைப் பெற்றுக்கொள்ள, தற்போழுது உத்தியோகபூர்வ வெளிநாட்டு பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொலைபேசி மூலம் தொடர்புகொண்டுள்ளார்.








