Breaking News

எழுக தமிழ் அன்று கண்டியில் செல்வம் அடைக்கலநாதன்(படங்கள்)

கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற எழுக
தமிழ் நிகழ்விற்கு தமது ஆதரவை வழங்கவுள்ளதாக அறிவித்திருந்த த.தே.கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளின் ஒன்றான ரெலோ அந்த நிகழ்வன்று அதனை தவிர்த்துக்கொண்டது.


இந்த நிகழ்வு தியாக தீபம் திலீபனின் நினைவுநாளிற்கு முந்தைய நாளாக தெரிவுசெய்வு தமிழர்களின் அகிம்சை வழியிலான கோரிக்கைகளை முன்வைப்பதற்காக தமிழ் மக்கள் பேரவை மற்றும் பொது அமைப்புக்கள் இணைந்து மேற்கொண்ட தீர்மானத்தை புறந்தள்ளிய ரெலோ கட்சியின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் அன்றைய நாளில் கண்டியிலுள்ள விடுதி ஒன்றில் நிகழ்வொன்றில் கலந்துகொண்டதாக மலையக கட்சி பிரதிநிதியொருவர் தமிழ்க்கிங்டொத்திற்கு தகவல் தந்துள்ளார்.

கடந்த காலங்களில் தேசியம் அகிம்சை போராட்டம் உண்ணாவிரதம் என அறிவித்தல் விடுத்துவந்த செல்வம் அடைக்கலநாதன் மற்றும் அமைச்சர் மனோ கணேசன் ஆகியோர் எழுக தமிழ் நிகழ்வைபற்றி அலட்டி கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


அத்தோடு தான் கலந்துகொள்ளாமல் விட்டுள்ளது மட்டுமல்லாது அண்மையில் ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியிலிருந்து கட்சி தாவிய பாராளுமன்ற உறுப்பினர் திரு சிவமோகன் அவர்களை அந்த நிகழ்வில் கலந்துகொள்ள வேண்டாம் என்றும் அது எமது அரசியல் எதிர்காலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று அவரை தடுத்துள்ளதால் தான் மக்களிடம் எதிர்ப்பை சம்பாதிக்க நேர்ந்துள்ளதாக சிவமோகன் தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறியுள்ளார்.

தொடர்புடைய முன்னைய செய்தி


முக்கியமான செய்திகளை அறிந்திட Fallow ஐ கிளிக் செய்யுங்கள்