Breaking News

ஜெனிவா தீர்மான நடைமுறைப்படுத்தல் – மங்களவுடன் பிரித்தானிய அமைச்சர் பேச்சு



ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் சிறிலங்கா அரசாங்கத்தினால் எந்தளவுக்கு நடைமுறைப்ப டுத்தப்படுகிறது என்பது தொடர்பாக, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சருடன் பிரித்தானியா நாடாளுமன்றத்தின், வெளிவிவகார மற்றும் கொமன்வெல்த் பணியக விவகாரங்களுக்கான இணை அமைச்சர் அலோக் சர்மா, பேச்சு நடத்தியுள்ளார்.

ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்க நியூயோர்க் சென்றுள்ள சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவுக்கும் பிரித்தானிய இணை அமைச்சர் அலோக் சர்மாவுக்கும் இடையில், நேற்று முன்தினம் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் சிறிலங்கா அரசாங்கத்தினால் எந்தளவுக்கு நடைமுறைப்படுத்தப்படுகிறது என்பது குறித்து இந்தச் சந்திப்பில் கலந்துரையாடப்பட்டது.

நல்லதொரு சந்திப்பாக இது இருந்தது என்று பிரித்தானிய இணை அமைச்சர் அலோக் சர்மா தனது ருவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.