த.வி.கூட்டணி அலுவலகம் முன்னாள் போராளிகளிடம் வழங்கப்படும்(காணொளி)
தியாக தீபம் திலீபனின் 29ஆவது ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு, கிளிநொச்சியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அஞ்சலி நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.
கிளிநொச்சி தமிழர் விடுதலை கூட்டணி அலுவலகத்தில் இடம்பெற்ற இந் நிகழ்வை, ஜனநாயக போராளிகள் கட்சி மற்றும் தமிழர் விடுதலை கூட்டணி ஆகியன இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.
இந்த நிகழ்வில் கலந்துகொள்ள த.வி.கூட்டணி தலைவர் திரு வீ.ஆனந்தசங்கரி தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் உட்பட முக்கிய போராளிகள் கால்பதித்த இந்த இடத்தை விடுதலைப்போரில் அர்ப்பணித்தவர்களுக்காக இந்த அலுவலகத்தை கையளிப்பதற்கு தீர்மானித்துள்ளேன். அந்த நிகழ்வு விரைவில் இடம்பெறும் அத்தோடு முன்னாள் போராளிகளான நீங்கள் சரியானவர்களிடம் ஆலோசனை பெற்று உரிமைக்காக குரல்கொடுக்குமாறும் சங்கரி கேட்டுக்கொண்டுள்ளார்.

குறித்த நிகழ்வில் தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி, ஜனநாயக போராளிகள் கட்சியின் சார்பில் அதன் தலைவர் சி.வேந்தன், செயலாளர் இ.கதிர், பொருளாளர் செ.விதுரன், ஊடக பேச்சாளர் க.துளசி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
உண்ணா நோன்பிருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் திரு உருவ படத்திற்கு, இதன்போது ஆனந்தசங்கரி மற்றும் வேந்தன் ஆகியோர் விளக்கேற்றி மலர்வணக்கம் செய்தனர். அதனைத் தொடர்ந்து அஞ்சலி உரைகளும் இடம்பெற்றன.
திலீபனின் நினைவுதினம் அனுஷ்டிப்பதை முன்னிட்டு கிளிநொச்சியில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்த நிலையில், பொலிஸார் இதுகுறித்து விசாரணை நடத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
முக்கியமான செய்திகளை அறிந்திட Fallow ஐ கிளிக் செய்யுங்கள்