Breaking News

பிரபாகரனின் பெயரை சொன்னால் போதும் நாமும் புலிகள் - விக்னேஷின் கடைசி குரல் பதிவு



காவிரி நீர் பிரச்சினையில் நாம் தமிழர் கட்சி சார்பில் முன்னெடுக்கப்பட்ட பேரணியின் போது தீக்குளித்து உயிர் நீத்த விக்னேஷின் கடைசி அழைப்பு குறித்த குரல் பதிவு தற்போது வெளியாகியுள்ளது.

பேரணிக்கு முதல்நாளான புதன்கிழமை வாட்ஸ் - அப்பில் நாம் தமிழர் சார்பாக பேரணிக்கு அழைப்பு விடுத்த விக்னேஷின் குரல் பதிவு இவ்வாறு வெளியாகியுள்ளது.

ஈழ விடுதலைக்கு அறவழியில் போராடிய தந்தை செல்வா கூறினார் எமது அடுத்த தலைமுறையினர் ஆயுதம் ஏந்தி போராட வேண்டும் என்று.

அதன்படி நமது தலைவர் பிரபாகரன் ஆயுதம் ஏந்தி போராடினார். நமது தலைவர் கூறினார் எமது அடுத்த தலைமுறையின் அறிவு எனும் ஆயுதம் ஏந்தி இன்னும் வீரியத்துடன் போராட வேண்டும் என்று.

இதோ அவரின் அடுத்த தலைமுறையினரான நாங்கள் வீரியத்துடன் கிளர்ந்து எழுந்து நிற்கின்றோம். புலிகள் வருவார்கள் என்ற மாயையை நீக்குவோம். புலிகளாய் வருவோம் என அந்த குரல் பதில் உள்ளது.