எழுக தமிழ் பேரணிக்கு ஆதரவு ; யாழ்ப்பாணத்தில் வர்த்தக நிலையங்கள் மூடல்
தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் இன்று இடம்பெறவுள்ள 'எழுக தமிழ்' மாபெரும் பேரணிக்கு ஆதரவு தெரிவித்து யாழ்ப்பாணத்தில் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணம் நகர் பகுதியிலுள்ள வர்த்க நிலையங்கள் உள்ளிட்ட ஏனைய பகுதிகளிலும் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.
உணவகங்கள்இ மருந்தகங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகள் வழங்கும் நிலையங்கள் தவிர்ந்த ஏனைய வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
அத்துடன் தனியார் பேருந்து சேவைகள் இடம்பெறவில்லையெனவும்இ இலங்கை போக்குவரத்து சபையின் சேவைகள் மாத்திரமே இயங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது