Breaking News

பலாலி விமான நிலைய அபிவிருத்திக்கு இந்தியாவிடம் உதவி கோருகிறது இலங்கை



பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்கு இந்திய அரசாங்கத்தின் உதவியை சிறிலங்கா அரசாங்கம் கோரியுள்ளது. சிறிலங்காவின் அனைத்துலக வர்த்தக மற்றும் மூலோபாய அபிவிருத்தி அமைச்சர் மலிக் சமரவிக்கிரம இதனைத் தெரிவித்தார்.

கொழும்பு வந்துள்ள இந்தியாவின் மத்திய வர்த்தக இணை அமைச்சர் நிர்மலா சீத்தாராமனுடன் இணைந்து கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.

“சிறிலங்காவில் இந்தியா பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொண்டுள்ளது.

பலாலி விமான நிலைய அபிவிருத்தி தொடர்பாக சிறிலங்கா அமைச்சரவை இன்னும் இரண்டு மூன்று மாதங்களுக்குள் முடிவு ஒன்றை எடுக்கும்” என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

பலாலி விமான நிலையத்தை பிராந்திய விமான நிலையமாக அபிவிருத்தி செய்யும் திட்டம் சிறிலங்கா அரசாங்கத்திடம் இல்லை என்று அண்மையில் பிரதி அமைச்சர் நிரோசன் பெரேரா நாடாளுமன்றத்தில் கூறியிருந்தார்.

அத்துடன், பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வது தொடர்பான உடன்பாடு எதுவும் இந்திய நிறுவனத்துடன் செய்து கொள்ளப்படவில்லை என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் நாடாளுமன்றத்தில் தகவல் வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.