Breaking News

10 ஆண்டுகளுக்குப் பின் மோசமான வீழ்ச்சியை சந்தித்துள்ள இலங்கையின் தேயிலை உற்பத்தி

சிறிலங்காவின் தேயிலை உற்பத்தி 10 ஆண்டுகளுக்குப் பின்னர் மோசமான வீழ்ச்சியைச் சந்தித்துள்ளதாக, சிறிலங்கா தேயிலைச் சபையின் தரவுகள் தெரிவிக்கின்றன.


கடந்த ஓகஸ்ட் மாதம் சிறிலங்காவின் தேயிலை உற்பத்தி 23 மில்லியன் கிலோவாக வீழ்ச்சி கண்டது. இது முன்னைய ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில், 13 சதவீத வீழ்ச்சியாகும்.

2006ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 21.5 மில்லியன் கிலோ தேயிலை உற்பத்தி செய்யப்பட்டிருந்தது. அதற்குப் பின்னர், இந்த ஆண்டிலேயே தேயிலை உற்பத்தியில் மோசமான சரிவு ஏற்பட்டுள்ளது.

அதேவேளை, 2016ஆம் ஆண்டின் ஜனவரி தொடக்கம் ஓகஸ்ட் வரையான 8 மாதங்களில், தேயிலை உற்பத்தியில் 27 மில்லியன் கிலோ அல்லது 12 வீத வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்தக் காலப்பகுதியில், 198.6 மில்லியன் கிலோ தேயிலை உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

அதேவேளை இந்த எட்டு மாதங்களில், ஒரு மாதத்தின் மொத்த தேயிலை உற்பத்தியை நாடு இழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.