இலங்கை தூதரைத் தாக்கிய ஐந்துபேர் மலேசிய காவல்துறையினரால் கைது
கோலாலம்பூரில், மலேசியாவுக்கான சிறிலங்கா தூதுவர் தாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில், ஐந்து பேர் மலேசிய காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மலேசியாவுக்கான சிறிலங்கா தூதுவர் இப்ராகிம் அன்சார், மற்றும் சிறிலங்கா தூதரக இரண்டாவது செயலர் ஆகியோர் நேற்றுமுன்தினம் மாலை கோலாலம்பூர் விமான நிலையத்தில் தாக்கப்பட்டிருந்தனர்.
இந்தச் சம்பவம், தொடர்பாகவே, ஐந்து பேரைக் கைது செய்திருப்பதாக மலேசிய காவல்துறை அறிவித்துள்ளது. மேலும் நான்கு பேரைத் தேடி வருவதாகவும், மலேசிய காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 27 வயதுக்கும், 55 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என்றும், விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்றும் மலேசிய காவல்துறை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
கண்காணிப்பு ஒளிப்பதிவு கருவியில் பதிவான காட்சிகளை வைத்தே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.