Breaking News

வேஷ்டியுடன் கிரிக்கெட் மைதானத்தில் களமிறங்கிய ஆஸி. அணி வீரர்கள்

இந்தியாவில் பிரபலாமான கிரிக்கெட் தொடரான ஐபிஎல் போன்று தற்போது தமிழகத்தில் டிஎன்பிஎல் என்ற கிரிக்கெட் தொடர் நடைப்பெற்று வருகின்றது.


இதில் நேற்று நடைபெற்ற சென்னை-கோவை அணிகளுக்கு இடையேயிலான போட்டியின் போது ஆஸி. அணி வீரர்களான ஹைடன் மற்றும் பிரட்லீ ஆகியோர் தமிழகத்தின் பாரம்பரிய ஆடையான வேஷ்டி, சட்டையில் வலம் வந்தனர்.

ஹைடன் ஏற்கனவே மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வேஷ்டி, சட்டையில் வந்து அசத்தி இருந்தார்.

பின்னர் சென்னை ஆல்பர்ட் திரையரங்கில் கபாலி படம் பார்த்தார். 

தற்போது மீண்டும் கிரிக்கெட் மைதானத்தில் வேஷ்டி, சட்டையில் வலம் வந்து தமிழ் கிரிகெட் ரசிகர்களை மீண்டும் உற்சாகப்படுத்தியுள்ளனர்.