Breaking News

வடக்கு அதிவேக நெடுஞ்சாலை திருகோணமலை வரை நீடிப்பு



கேந்திர முக்கியத்துவம்மிக்க துறைமுக நகரான திருகோணமலையை அபிவிருத்தி செய்யும் நோக்கில், வடக்கு அதிவேக நெடுஞ்சாலை திருகோணமலை வரை நீடிக்கப்படவுள்ளதாக, நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

தம்புள்ள, ஹபரணை வழியாக இந்த நெடுஞ்சாலை நீடிக்கப்படவுள்ளது. மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் இருந்து, கிளையாக, இந்த வடக்கு அதிவேக நெடுஞ்சாலை அமைக்கப்படவுள்ளது.

வடக்கு அதிவேக நெடுஞ்சாலை ஹபரணை வரையில் சீன நிறுவனத்தினால் அபிவிருத்தி செய்யப்படும்.

அதனை திருகோணமலை வரை விரிவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.