Breaking News

முள்ளிவாய்க்கால் தனியார் காணிகளை இராணுவத்திடம் இருந்து விடுவிக்கக் கோரிக்கை



முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் பகுதியில் இராணுவத்தினர் வசமுள்ள 617 ஏக்கர் காணியில் 358 ஏக்கர் காணி தனியாருக்கு சொந்தமானது என்றும் இதனை மீட்டுத் தருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் கடற்படையின் கட்டுப்பாட்டில் உள்ள 617 ஏக்கர் காணியினை கடற்படையினருக்கு வழங்கும் பொருட்டு விண்ணப்பத்துள்ள நிலையிலேயே, இதனை இவ்வாறு வழங்க முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன் தெரிவித்துள்ளார். அவர் இதனை பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின் போதே குறிப்பிட்டுள்ளார்.

இந்த காணிகளை கடற்படையினருக்கு வழங்குவதன் ஊடாக எமது மாவட்டத்தின் ஒட்டு மொத்த கடல்வளத்தையும் வழங்குவதற்கு ஒப்பானது எனவே இதனை ஏற்றுக்கொள்ள முடியாது இதற்கு எமது எதிர்ப்பை வெளியிடுகின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்த பகுதி பல்கலைக்கழகம் மற்றும் சுற்றுலா மையம்ங்கள் அமைக்க முடியும் எனவே இங்குள்ள கடற்படை முகாம் முழுமையாக வெளியேறி வேறு இடங்களுக்கு எடுத்துச் செல்லப்பட வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.