Breaking News

கிளிநொச்சி முறிகண்டியில் விபத்து: இளைஞன் பலி



கிளிநொச்சி - முறிகண்டி அக்கராயன் வீதியில் இரண்டாம் கட்டைப்பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக மாங்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சி பாரதிபுரத்தைச் சேர்ந்த வேலாயுதம் சதீஸ்கரன் என்ற 22 வயதுடைய இளைஞனே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞன் வேலை முடித்து வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் திரும்பி கொண்டிருந்த வேளையிலே, எதிரே வந்த டிப்பருடன் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.



விபத்தில் உயிரிழந்த இளைஞனின் சடலம் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மாங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.