Breaking News

செயல்பாட்டுக்கு வந்த ​உலகின் மிகப்பெரிய ரேடியோ தொலைநோக்கி



உலகின் மிகப்பெரிய ரேடியோ தொலைநோக்கி ஒன்றை சீனா நேற்று செயல்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளது.

விண்வெளித்துறையில், ஆராய்ச்சி ரீதியில் உலக நாடுகளுடன் சீனா போட்டியிட்டு வருகிறது. இதற்காக பல்லாயிரம் கோடி செலவில் விண்வெளி ஆராய்ச்சி திட்டங்களை சீனா செயல்படுத்தி வருகிறது.

இந்த நிலையில், உலகின் மிகப்பெரிய ரேடியோ தொலைநோக்கி ஒன்றை வடிவமைக்க வேண்டும் என்று சீன அரசிடம் கடந்த 1994 ஆம் ஆண்டு வானியல் வல்லுனர்கள் யோசனை தெரிவித்தனர்.

இந்த யோசனை தெரிவிக்கப்பட்டு 17 ஆண்டுகள் கடந்த நிலையில், தென்மேற்கு சீனாவில், கிஸோ மாகாணத்தில் இந்த ரேடியோ தொலைநோக்கியை நிறுவ சீனா முடிவு எடுத்தது.

இதற்காக அந்தப் பகுதியில் வசித்து வந்த 8 ஆயிரம் பொதுமக்களை இடம் பெயர வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அவர்களுக்காக 2 குடியிருப்பு தொகுப்புகளாக 600 அடுக்கு மாடி வீடுகள் கட்டித்தரப்பட்டன.

அந்தப் பகுதியில் 2011 ஆம் ஆண்டு, ரேடியோ தொலைநோக்கியை நிறுவும் பணியை சீனா தொடங்கியது.

இந்த திட்டத்துக்காக 180 மில்லியன் அமெரிக்க டொலர்களை சீனா முதலீடு செய்தது. கடந்த 5 ஆண்டுகளாக இந்த பணி நடந்து தற்போது முடிந்துள்ளது.