லசந்த விக்கிரமதுங்கவின் சடலம் நீதிமன்ற உத்தரவுக்கு அமைய தோண்டியெடுக்கப்பட்டது
சண்டே லீடர் பிரதம ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் சடலம் இன்று (27) பொரளை கனத்தை மயானத்தில் புதைக்கப்பட்டுள்ள, இடத்திலிருந்து நீதிமன்ற உத்தரவின் பேரில் பிரேத பரிசோதனைக்காக , ஐந்தரை வருடங்களின் பின்னர், சற்று முன்னர் தோண்டியெடுக்கப்பட்டது.
லசந்த விக்கிரமதுங்கவின் மரணம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் சிக்கல் தன்மை காணப்படுவதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்துக்கு ஏலவே தெரிவித்திருந்தது.
இதற்கேற்ப, இவரின் சடலத்தை தோண்டியெடுத்து, பிரேத பரிசோதனை மேற்கொள்ளுமாறு கல்கிஸ்ஸை மஜிஸ்ட்ரேட் கடந்த 8 ஆம் திகதி உத்தரவு பிறப்பித்திருந்தார்.