Breaking News

யாழ்.நீர் சுத்திகரிப்பு கருவியை ஜனாதிபதி திறந்து வைக்கவுள்ளார்



யாழ்.பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டு வரும் பாரிய நீர் சுத்திகரிப்பு கருவியை, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 2ஆம் திகதி யாழ். விஜயம் மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திறந்துவைக்கவுள்ளார்.

யாழ்.பல்கலையின் மாணவர் விடுதிக்கு போதுமான நீர் சுத்திகரிப்பு கருவி இல்லாத காரணத்தால் பெரும் சிரமத்தை எதிர்கொள்வதாகவும், இதனை நிவர்த்திசெய்து தருமாறும் கோரி ஜனாதிபதியிடமும் பல்கலை நிர்வாகத்திடமும் மாணவர்கள் கோரியிருந்தனர்.

இதனையடுத்து, ஜனாதிபதி செயலகத்தின் பணிப்புரைக்கமைவாக தற்போது அங்கு பாரிய நீர் சுத்திகரிப்பானை நிறுவும் பணியை கடற்படையினர் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.