கூட்டு எதிர்க்கட்சியினரை பழிவாங்க வேண்டாம்!- கெஞ்சுகிறார் மஹிந்த
கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை பழிவாங்க வேண்டாம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, தற்போதைய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
கொழும்பு பத்திரிகை ஒன்றின் ஊடாக மஹிந்த ராஜபக்ச இந்த பகிரங்க கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் தொடர்ந்தும் பழிவாங்க வேண்டாம். எவ்வித கேள்வியும் இன்றி கண்மூடித்தனமாக பழிவாங்கல்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
இவ்வாறு பழிவாங்கல்கள் இடம்பெறுவதனால் சில அரச அதிகாரிகளும் பணிகளை மேற்கொள்ள அஞ்சுவார்கள், இது நாட்டின் அபிவிருத்திக்கு பாதகமானதாக அமையும்.
பழிவாங்கல்களில் ஓர் எல்லை இருக்க வேண்டும்.இந்த பழிவாங்கல்கள் எப்போது முடிவடையும் என்ற கேள்வி எழுகின்றது.
நான் முதல் தடவையாகவே இவ்வாறு அரசாங்கத்திடம் கோரிக்கை முன்வைக்கின்றேன்.
கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை இலக்கு வைத்து தொடர்ந்தும் பழிவாங்கல்களை மேற்கொள்ள வேண்டாம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.