நட்டஈடு தருவதாகக் கூற இராணுவத்தினருக்கு எந்த அருகதையுமில்லை: முதலமைச்சர்
வடக்கில் தொடர்ந்தும் இராணுவம் நிலைகொண்டிருப்பதற்கு நாங்கள் ஒருபோதும் அனுமதி வழங்க மாட்டோம். இந்த நிலையில் எவ்வாறு இராணுவத்திற்கு காணி தேவை எனக் கூறி அதற்கு இலாபகரமான நஷ்டஈடு தருவதாக யாழ். மாவட்ட மக்களுக்கு கடிதம் வழங்க முடியும்? இது மனிதாபிமான நடவ டிக்கையாக ஒருபோதும் கொள்ளப்பட முடியாது.
எனவே மக்களின் நலன்களை பாதிக்கும் வகையில் மேற்கொண்டு நடவடிக்கைகள் எடுப்பதை நிறுத்த மாறு கோரியும் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் என்.வேதநாயகத்திற்கு வடக்கு மாகாண முதலமைச்சர் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். அண்மையில் யாழ்.மாவட்ட செயகலத்தினால் நலன்புரி முகாம் மக்களுக்கு வழங்கப்பட்ட கடிதம் தொடர்பில் நேற்றைய மாகாண சபை அமர்வில் சுட்டிக்காட்டியே மேற்படி கடிதத்திற்கு ஒப்புதல் வழங்குமாறு கோரி கடிதத்தை முதலாமைச்சர் சபையில் வாசித்தார்.
நிலம்இ புனர்வாழ்வுஇ மீள்குடியேற்ற ஆகியன குறித்து வட மாகாணசபைக்கு அதிகார்ணகள் வழங்கப்பட்ட பின்னர் போர்க்காலம் போன்று இராணுவத்தின் சொல்கேட்டு ஒருதலைப்பட்ச முடிவை எடுப்பது பாதகமான நிலையை ஏற்படுத்தும். வடக்கு மக்களின் தேவைகள் வடக்கு மாகாண சபையே தீர்மானிக்க முடியும். இதனை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.
தற்போது மக்கள் தொடர்பான நடவடிக்கைகளை சிவில் நிர்வாகம் எடுத்து வருகின்றது. அந்த சிவில் நிர்வாகத்தில் மக்களுக்கான தீர்வு என்ன என்பது குறித்து தங்களுக்கு நன்றாகவே தெரியும். வடக்கு மாகாண சபையை கலந்தாலோசிக்காமல் பாதுகாப்பு அமைச்சினால் எந்த ஒரு தலைப்பட்சமான முடிவுகளையும் வடக்கு மக்கள் தொடர்பில் எடுக்க முடியாது.
பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு பின்னர் மக்களை மீள்குடியேற்றுதல். வாழ்வாதாரத்தை கட்டியெழுப்புதல் போன்றவை தொடர்பில் சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட மனிதவுரிமைகள் கொள்கைகள் மதிப்புக்கள் உள்ளன. அவற்றுக்கு ஏற்ற வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
உண்மையில் நிலத்தை பே?ன்ற பெரிய தேவைகல் தொடர்பில் கேள்வி கேட்க எமக்கு உரிமை உண்டு. அரச பாதுகாப்பு மற்றும் மனித பாதுகாப்பை சமநிலைப்படுத்தும் பே?ருக்கு பின்னர் இராணுவ முகாம்களுக்கு மாற்று இடங்களை வழங்க முடியும். அவர்களை இரு இடங்களுக்கு மாற்ற முடியும். இராணுவத்தின் நிலைமைகளை தீர்மானிக்கும் பே?து இராணுவம் எமக்கு ஆலோசனை வழங்குவது நடைமுறைக்கு புறம்பான காரணங்களை அடிப்படையாகக் கெ?ண்டது. இதனை நிரூபிக்க நிபுணர் சான்றுகள் கெ?ண்டுவர முடியும்.
தவிரஇ இந்த பிரச்சினைகள் இராணுவத்தின் அமைதி மாற்றம் பே?ர் உதவுவதுதான் இராணுவத்தின் ஆட்குறைப்பு தெ?டர்பானது இது பாதுகாப்பு துறை மறுசீரமைப்பு உள்ளிட்ட செப்டம்பர் 2015 ஐ.நா. ஜெனீவா தீர்மானங்கள் தெ?டர்பாக விஜயத்தின் பே?து ருNளுபு நிறுவனம் எழுப்பியுள்ளன. எங்களோடு கலந்தாலே?சிக்காமல் இடம் பெயர்ந்தே?ருக்கு வழங்கப்பட்ட உங்கள் எழுத்து மூலாமான கடிதங்கள் இராணுவத்தை அரவணைத்து எங்களை புறந்தள்ளும் செயற்பாடாகும்.
வழங்கப்பட்ட கடிதத்தில் குறிப்பிடபட்டுள்ளது போன்று சில காணிகள் மட்டும் 2017 இன் இறுதியில் தான் விடுவிக்க முடியும் என இராணுவம் கூறியுள்ளது ஏன் என்று தெரிந்துகொள்ள விரும்புகின்றேன். யாழ்.மாவட்ட கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க சுமார் ஆயிரம் ஏக்கர் நிலம் தான் இராணுவ முகாம் அமைப்பதற்கு அதிகபட்சமாக தேவை எனவும் கூறியிருந்தார்.
அப்படியானால் 3500 ஏக்கர் உடனடியாக திரும்பப் பெறலாம். அதுவும் காரணங்கள் இல்லாமல் ஆயிரம் ஏக்கர் இராணுவத்திற்கு வழங்குவதனை ஆய்வு செய்ய வேண்டும். மேலும் இராணுவம் சதாகாலங்களிலும் எங்கள் பகுதிகளில் குடியிருக்க பே?கிறே?ம் என்று முடிவு செய்ய முடியாது. பொலிசாரை கொண்ட சிவில் நிர்வாகத்தை கோரும் நாம் இராணுவத்தை வெளிஎருமாறே கோரி வருகின்றோம். இந்த விடயங்கள் வெறுமனே இது பே?ன்ற கடிதங்கள் எமது மக்களை குழப்புகின்றன.
மற்றும் இலாபகரமான இழப்பீடு தருவது என்பதும் இந்த நல்லாட்சியின் மனிதாபிமான நடவடிக்கைகளாக தெரியவில்லை. இந்த விடயம் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகள் மற்றும் வடக்கு மாகாண சபையினரை உள்ளடக்கி கூட்டம் ஒன்றினை தாமதம் இல்லாமல் கூட்டுமாறு கேட்டுக்கொள்கின்றேன். இதற்கிடையில் இடம்பெயர் மக்களின் நலனை சீர்குலைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் எனவும் முதலமைச்சரது கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த கடிதத்திற்கு உறுப்பினர்கள் அனைவருமே ஆதரவு தெரிவித்து பேசியிருந்தனர். கடிதத்தின் பிரதிகள் யாழ்.மாவட்ட கட்டளைத்தளபதி மகேஷ் சேனநாயக்க, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, வடக்கு மாகாண ஆளுநர் ரெஜிநோல்ட் குரே, மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், எதிக்கட்சி தலைவர் இரா.சம்பதன் ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.