வட மாகாணத்திலுள்ள 42 அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்த திட்டம்?
வட மாகாணத்தில் நஷ்டத்தில் இயக்கும் மற்றும் மூடப்பட்டுள்ள 42 அரச நிறுவனங்களை கூடிய விரைவில் தனியார் மயப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் வட்டாரங்கள் மூலம் தெரியவந்துள்ளன.
இது தொடர்பான பிரேரணையை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தின் போது, வட மாகாண ஆளுநர் நெஜினோல் குரே ஜனாதிபதியிடம் கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அம்மாகாணத்திலுள்ள முதலீட்டாளர்களை இதற்கு தொடர்புபடுத்திக் கொள்ளவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
இது தொடர்பில் வட மாகாண ஆளுநரிடம் வினவிய போது,
“ மூடப்பட்டுள்ள 42 அரச நிறுவனங்களை மீண்டும் ஆரம்பிப்பதற்கு பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றன. கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற முதலீட்டுக்கான மாநாட்டில், முதலீட்டாளர்களுக்கும் இதற்கான அழைப்பு விடுக்கப்பட்டதாகவும்” அவர் கூறியுள்ளார்.