Breaking News

விடுதலைப் புலிகளின் தலைவரின் அடையாள அட்டை அருங்காட்சியகத்தில்!



விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் அடையாள அட்டையை புதிதாகஅமைக்கப்படவுள்ள அருங்காட்சியகத்தில் பார்வைக்கு வைக்கப்பட உள்ளதாக தகவல்கள்தெ ரிவிக்கின்றன.

பிரபாகரனின் அடையாள அட்டையை இராணுவ அருங்காட்சியகத்திற்கு நன்கொடையாகவழங்குவதாக அண்மையில் மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன கூறியுள்ளார்.

மேலும், நந்திக்கடலில் வேலுப்பிள்ளை பிரபாகரன் கொள்ளப்பட்ட 53 ஆவது பிரிவில் மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன தலைமை தாங்கினார்.


வரலாற்றில் இந்த உடைமைகள் அழிவை நோக்கிச் செல்லாது என்றும் இவற்றை மக்கள்தெரிந்துக் கொள்ள உதவும் என்றும் இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ரொசான்செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

அத்துடன் புதிய இராணுவ அருங்காட்சியகம் ஹோமாகம டியகம பகுதியில் அமைக்கஇருப்பதாகவும் இவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை,விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் அடையாள அட்டையை தாமே நினைவுப் பொருளாக எடுத்து வைத்திருப்பதாக மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன ஆங்கில வார இதழ் ஒன்றுக்கு கூறியிருந்தார்.

இருப்பினும் பிரபாகரனின் உடல் தகனம் செய்யப்பட்ட போது அந்த இடத்தில் இருந்த அவரது அடையாள அட்டையை தான் நினைவு பொருளாக எடுத்துக் கொண்டதாகவும் இவர்குறிப்பிட்டுள்ளார்.

அடையாள அட்டையை இன்று வரையிலும் பாதுகாத்து வருவதாகவும், அதை மக்களின்பார்வைக்காக அருங்காட்சியகத்திற்கு ஒப்படைக்க இருப்பதாகவும் கமால் குணரத்ன மேலும் குறிப்பிட்டிருந்தார்.

இதேவேளை,திருகோணமலை, உவர்மலையில் பகுதியில் புதிய இராணுவ அருங்காட்சியகம்ஒன்றை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த அருங்காட்சியகத்தை இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் கிரிசாந்த டி சில்வா கடந்த 19 ஆம் திகதி திறந்து வைத்தார்.

காலனித்துவ காலத்தில் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் தொடக்கம், விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் வரையில் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

அத்துடன் விடுதலைப் புலிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்களும் குறித்தஅருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.