Breaking News

ஆறாவது நாளாகத் தொடர்ந்தது தமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதம்



அனுராதபுர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 20 தமிழ் அரசியல் கைதிகள், நேற்று ஆறாவது நாளாகவும் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டிருந்தனர்.

தமக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளை துரிதப்படுத்தக் கோரியும், தமது விடுதலையை விரைவுபடுத்தக் கோரியும் அனுராதபுர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் கடந்த 21ஆம் நாளில் இருந்து உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆறு நாட்களாக இவர்கள் உணவு உண்பதை தவிர்த்து வருவதாகவும், எனினும், அவர்கள் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாக மருத்துவ அதிகாரி தெரிவித்ததாகவும் சிறைச்சாலைகள் ஆணையாளர் நிசாந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.