ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுடன் இணையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு!
எதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து போட்டியிட தமிழ் தேசியக் கூட்டமைப்பு விருப்பத்துடன் காணப்படுவதாக மேல் மாகாண சபை முதலமைச்சர் இசுர தேவப்பிரிய தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று (10) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட போது, ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
டக்ளஸ் தேவானந்தாவை எம்முடன் இணைந்துகொண்ட போது, அன்றைய இரவே, த.தே.கூட்டமைப்பு தலைவர் ஜனாதிபதியிடம் தொடர்புகொண்டு, ஏன் டக்ளஸ் தேவானந்தாவை சேர்த்துள்ளீர்கள் என வினவியுள்ளார். த.தே.கூட்டமைப்பு, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து அடுத்த தேர்தலில் போட்டியிட விருப்பத்துடன் உள்ளதெனவும் அக்கட்சியின் தலைவர் ஜனாதிபதியிடம் குறிப்பிட்டுள்ளார்.
சிலபோது ஸ்ரீ ல.சு.கட்சியின் பங்காளிக் கட்சியாகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு விளங்கலாம் எனவும் முதலமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.