புதிய கட்சி விரைவில் -மஹிந்த
தேசிய அரசாங்கம் அமைத்துள்ள இரு பிரதான கட்சிகளான ஐ.தே.கட்சியும், ஸ்ரீ ல.சு.கட்சியும் இணைந்து ஸ்ரீ லங்கா ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணி எனும் புதிய கட்சியை அமைக்கப் போவதாக தனக்கு தகவல் கிடைத்துள்ளது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
கூட்டு எதிர்க் கட்சியின் பொதுக் கூட்டமொன்று நேற்று ஹோமாகம நகரில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் கூறினார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் மாநாடு எமது ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர், எமது கட்சியின் ஸ்தாபகரின் மகள் உட்பட எமது ஸ்ரீ லங்கா கட்சி உறுப்பினர்களின் பங்களிப்புடன் இன்று நடைபெற்றது. அதேபோன்று, ஸ்ரீ ல.சு.க.யின் மாநாடு ஐ.தே.கட்சியினருடன் நடாத்தப்பட்டது.
எனக்கு யாரோ எழுதி அனுப்பியுள்ளார்கள். இந்த இரு கட்சிகளையும் கலைத்துவிட்ட ஒரு கட்சி அமைத்தால் சிறந்தது என. அந்தக் கட்சியின் பெயர் இவ்வாறு அமையவுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு கட்சி அமைக்கப்பட்டால், மிகச் சரியான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் எம்முடன் இருப்பதை கண்டுகொள்ளலாம் எனவும் மஹிந்த ராஜபக்ஷ மேலும் கூறினார்.