Breaking News

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், நடிப்பு…! மகிந்த



மலேசியாவில் நடைபெற்றதாக கூறப்படும், தாக்குதல்களும், மகிந்த ராஜபக்சவிற்கு புலிகளால் ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும் வெளிவரும் தகவல்களுக்கான கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் நடிப்பு என்று எல்லாமே மகிந்த ராஜபக்ச தான் என அவரை மேற்கோள்காட்டி அரசியல் விமர்சகர்கள் கருத்து வெளியிடத் தொடங்கியிருக்கின்றார்கள்.

நாட்டில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு அண்மைய நாட்களாக கடும் தோல்வியும், அவமானமும் ஏற்பட்டு அவர் மனநிலை பாதிக்கப்பட்டிருக்கின்றார் என முன்னதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

அது முற்றிலும் உண்மை என்கிறார்கள் பெயர் குறிப்பிடவிரும்பாத அதிகாரிகள். மைத்திரியிடம் தொடர் தோல்வியை வாங்கிக் கட்டிக்கொண்ட மகிந்த, சிங்கள மக்கள் மத்தியில் இருந்தும் மெல்ல ஓரம்கட்டப்பட்டுவருவதை உணரத் தொடங்கியிருக்கின்றார்.

இந்நிலையில், நாட்டில் தன்னால் இயலாமல் இருப்பதையும், தன்னுடைய தியாகங்களை சிங்கள மக்கள் மத்தியில் இருந்து நீங்காமல், அவர் புலிகளோடு போரிட்டதனால் புலிகளால் தனக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என்பதை சிங்கள மக்களுக்கு அவர் உணர்த்துவதற்கு விளைந்திருக்கிறார்.

நாட்டை மீட்டு, அமைதியைக் கொண்டுவந்த என்னை பழிவாங்குவதற்காக புலிகளும் அவர்களுக்கு ஆதரவான புலம்பெயர் தமிழர்களும் இப்பொழுதும் துடியாய் துடிக்கின்றார்கள்.

அவர்களின் இலக்கு நான் தான். அதாவது உங்களுக்கு நிம்மதியான வாழ்க்கையை பெற்றுக்கொடுத்த என்னைத் தான் அவர்கள் தேடுகின்றார்கள்.

இதை சிங்கள மக்களுக்கு காட்டி மக்களிடத்தே ஏற்பட்டிருக்கும் மைத்திரி போதையை இல்லாமல் செய்வதே அவரின் நோக்கம்.

அதனால் தான் அவர் மலேசியாவை தன்னுடைய பயணத்தின் இலக்காக தீர்மானித்திருக்கின்றார். இதன் மூலமாக அங்கிருக்கும் தமிழ் மக்கள் தன்னுடைய செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு வெளியிடுகின்றார்கள் என்பதைக்காட்டி, தன்னை பாதுகாக்க அரசாங்கத்தை வலியுறுத்துங்கள் என்பதை உணர்த்துவதற்கும் அவர் எத்தனித்திருக்கின்றார்.

இன்னொரு புறத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாநாட்டில் தான் கலந்து கொள்வதை தவிர்ப்பதற்கும், பின்னர் மைத்திரிபால சிறிசேனவிற்கு கிடைத்த வெற்றியை மக்களிடத்தில் இருந்து இல்லாமல் செய்வதற்கும் தன் மீது தாக்குதல் நடத்த முயன்றார்கள், தனக்கு எதிராக ஆர்ப்பாட்டம் பண்ணினார்கள் என்று மகிந்த ராஜபக்ச காட்ட விளைந்திருக்கின்றார்.

அவரின் இந்த முடிவிற்கு பொருத்தமான இடமானது மலேசியா தான். ஒன்று அங்கு தான் புலிகளின் தலைவர்கள் சிலர் தப்பியோடிப் போய் இருப்பதாக முன்னதாக தகவல்கள் கசியவிடப்பட்டிருந்தன.

தவிரவும், தமிழகத்தில் இருந்து சென்ற பலரும் அங்கு தான் இருக்கின்றார்கள். இதனால் தமிழ் நாட்டு மக்கள் மட்டுமல்ல, மலேசியத் தமிழர்களும் கூட தன்னை எதிர்க்கின்றார்கள். அவர்களும் புலிகளுக்கு ஆதரவானவர்கள் என்றும் எடுத்துக்காட்ட முனைந்திருக்கிறார் மகிந்த.

2009ம் ஆண்டிற்குப் பின்னர் புலிகள் முற்றிலுமாக அழிக்கப்பட்டுவிட்டார்கள். ஆனால் அவர்களின் செயற்பாடுகள் வெளிநாடுகளில் தொடர்ந்தும் இருப்பதாக கூறிவந்த மகிந்த ராஜபக்ச அதனை வைத்து இப்பொழுது தன்னைத்தானே தாக்குவதாக ஒரு கதையெழுதி அதை வெளியில் விட்டு இருக்கிறார்.

இப்பொழுது அரசியல் அநாதையாகியிருக்கும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, தன்னை அரசியலில் நிலைநிறுத்திக் கொள்ள சிங்கள மக்களின் மனதில் அனுதாப அலைகளை ஏற்படுத்தி, தன்னை பரிதாபத்திற்குரியவராக காட்டிக் கொண்டு, அவர்கள் மனதில் மீண்டும் நிலைத்து நிற்க விரும்புகிறார்.

அதற்காக அவர் பல்வேறு வகைகளிலும் முயன்றுவருகின்றார். அதில் இன்னொருவடிவம் தான் மலேசியாவில் அவருக்கு எழுந்த எதிர்ப்புக்கள்.

எனினும் தன்னைத் தானே தாக்குதவற்கு அவர் ஆட்களைக் தெரிவு செய்திருக்கிறார் என்று கிண்டலாக கொழும்பு அரசியலில் பேசப்படுகிறது.

எதுவாயினும் மகிந்த எழுதிய கதையில் அவரே இப்பொழுது கோமாளியாகிவிட்டார் என்று சில அதிகாரிகள் பேசத் தொடங்கியிருக்கிறார்கள்.