Breaking News

ஐ.நா.செயலரிடம் முதலமைச்சர் கொடுத்தது என்ன?(படங்கள்)

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர்

பான்கி மூன் அவர்கள் வடக்கு முதல்வர் க.வி.விக்னேஸ்வரன் அவர்களை இன்று வெள்ளிக்கிழமை (02.09.2016) சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். யாழ் பொதுநூலகத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பின்போது வடக்கு முதல்வர் க.வி.விக்னேஸ்வரன் அவர்களுடன் வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், மீன்பிடி அமைச்சர் பா.டெனீஸ்வரன், கல்வி அமைச்சர் த.குருகுலராஜா ஆகியோரும் கலந்துகொண்டிருந்தார்கள்.



இதன்போது முக்கியமாக 4000 வரையான காணாமல்போனோரின் தகவல், சர்வதேச போர்க்குற்றவிசாரணை ,முன்னாள் போராளிகளின் விசஊசிவிடயம் மற்றும் வடக்கில் இடம்பெறும் பௌத்த மயமாக்கல்,இராணுவத்தினரின் நெருக்கடிகள், மத்திய அரசின் நிலைப்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடியதோடு முதலமைச்சரால் தயார்செய்யப்பட்டிருந்த விசேட ஆவணம் ஒன்றும் பாங்கிமூனிடம் கையளிக்கப்பட்டிருப்பதாக தமிழ் கிங்டொத்தின் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இந்த ஆவணத்தில் என்ன விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளது என்ற விடயம் த.தே.கூட்டமைப்பின் தலைமைகளுக்கு தெரியாதமையால் அது நல்லாட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்திவிடும் என அஞ்சும் சிலருக்கு  விசனத்தை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை. முன்னதாக த.தே.கூட்டமைப்பை சந்தித் மூன் முதல்வருடனான சந்திப்பில் பல விடயங்களையும் ஆர்வத்துடன் கேட்டறிந்துகொண்டதாகவும் தெரியவருகின்றது.







தொடர்புடைய முன்னை செய்தி




முக்கியமான செய்திகளை உடனுக்குடன்  அறிந்திட Fallow ஐ கிளிக் செய்யுங்கள்