நாடு தெளிவான மாற்றமொன்றை நோக்கி செல்கிறது- பான் கீ மூன்
இலங்கை தற்போதைய அரசாங்கத்தில் தெளிவான மாற்றமொன்றை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனவரி 8 ஆம் திகதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக நியமனம் பெற்றதன் பின்னர் நாட்டில் நம்பிக்கை தரும் செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அபிவிருத்தியை இலக்காகக் கொண்ட நிலையான சமாதானம் எனும் கருப்பொருளில் இன்று (02) கொழும்பில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
19 ஆவது அரசியல் சீர்திருத்தமும், தகவல் அறியும் உரிமையும் தொடர்பான சட்டம் நிறைவேற்றப்படுவது நல்லதொரு முன்னெடுப்பாக கொள்ளப்பட வேண்டும். 1950 களின் பின்னர் முதற் தடவையாக இந்நாட்டில் தமிழ், சிங்கள மொழிகளில் தேசிய கீதம் இசைக்கப்பட்டமை சிறப்புக்குரிய ஒரு விடயம் எனவும் இது போன்ற நடவடிக்கைகள் மூலம் இனங்களுக்கிடையில் நம்பிக்கையைக் கட்டியெழுப்ப முடியும் எனவும் பான் கீ மூன் குறிப்பிட்டுள்ளார்.